பாதிப்பில் இருந்து மீள்கிறது தமிழகம்

2 mins read
73e988d3-d90b-48e0-ae32-d2b79bf3638f
தமிழக முதல்வர் பழனிசாமி. கோப்புப்படம் -

சென்னை: கொரோ­னா­வால் ஏற்­பட்ட பொரு­ளா­தா­ரப் பாதிப்­பில் இருந்து தமி­ழ­கம் விரைந்து மீண்டு வரு­வ­தா­கக் கூறி­யுள்ள தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, கொரோனா தடுப்பு நட­வ­டிக்கை களுக்கு பொது­மக்­கள் தொடர்ந்து முழு ஒத்­து­ழைப்பு தர­வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

தமி­ழ­கத்­தில் தளர்­வு­க­ளு­டன் கூடிய ஊர­டங்கு மேலும் நீட்­டிக் கப்­பட வாய்ப்­புள்­ள­தா­க­வும் மருத்­துவ நிபு­ணர்­க­ளு­ட­னான ஆலோச னைக்­குப் பிறகு உறு­தி­யான அறி விப்பு வெளி­யா­கும் என்று ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்­டி­ருந்­தன.

மாநி­லத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று பர­வா­மல் தடுப்பதற்­காக அமல்­ப­டுத்­தப்­பட்ட ஊரடங்கு உத்­த­ரவு நாளை 31ஆம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது.

இந்­நி­லை­யில், இைத நீட்­டிப்­பதா, வேண்­டாமா என்­பது குறித்து தலை­மைச் செய­ல­கத்­தில் இருந்து காணொ­ளிக் காட்சி மூலம் நேற்று காலை­யில் மாவட்ட ஆட்­சி­யர் களு­ட­னும் மாலை­யில் மருத்­து­வக் குழு­வி­ன­ரு­டன் முதல்­வர் பழ­னி­சாமி ஆலோ­சனை நடத்­தி­னார்.

நிகழ்ச்­சி­யைத் தொடங்கி வைத்து பேசிய அவர், "கொரோனா காலத்­தி­லும் தமி­ழ­கம் அதிக அள­வில் முத­லீ­டு­களை ஈர்த்­துள்­ளது. நாட்­டி­லேயே இந்த மோச­மான கால­கட்­டத்­தி­லும் அதி­க­மான வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கிய மாநி­ல­மாக தமி­ழ­கம் உள்­ளது.

"ஊர­டங்­கால் ஏற்­பட்ட பாதிப்பு களைச் சரி­செய்­வ­தற்­காக ரூ.200 கோடி மதிப்­பில் செயல் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. தமி­ழ­கம் முழு­வ­தும் காய்ச்­சல் முகாம்­கள் நடத்­து­வ­தன் மூலம் கொரோனா பர­வல் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

"கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளைக் குணப்­ப­டுத்­து­வ­தற்கு தோதாக கூடு­த­லாக 15,000 மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் நிய­ம­னம் செய்­யப்பட்­டுள்­ள­னர்.

"இது­வரை கொவிட்-19 நோய்த் தொற்று கட்­டுப்­பாடு, சிகிச்சை, நிவா­ர­ணப் பணி­க­ளுக்­காக தமி­ழக அரசு சுமார் 7,162 கோடி ரூபாய்க்கு மேல் வழங்­கி­யுள்­ளது.

"இந்­தி­யா­வி­லேயே கொவிட்-19 ஆய்­வ­கப் பரி­சோ­தனை செய்­வ­தில் தமிழ்­நாடு தொடர்ந்து முத­லி­டம் வகித்து வரு­கிறது. தற்­போது நாளொன்­றுக்கு சுமார் 75,000 மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­ப­டு­கின்­றன. இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளின் கார­ண­மாக நாட்­டி­லேயே சிகிச்சை முடிந்து குண­மா­ன­வர்­கள் 85.45% மேல் உள்ள மாநி­ல­மா­க­வும் மிகக் குறை­வான, அதா­வது 1.7% இறப்பு உள்ள மாநி­ல­மா­க­வும் தமிழ்­நாடு விளங்­கு­கிறது," என்­றும் முதல்­வர் பழனி­சாமி கூறி­னார்.