கோவை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதத் தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சனிக்கிழமையே மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களையும் வாங்கிவிடுகிறார்கள்.
இதன் காரணமாக பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மொத்தமாகக் கூடுவது வழக்கமாகி வருகிறது. நேற்று முன்தினம் கோவையில் பல்வேறு இடங்களில் கூடிய உழவர் சந்தைகளில் இருந்து ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இறைச்சி, மீன், காய்கறி, பழங்களை வாங்கிச் சென்றனர். இதே நிலைதான் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். படம்: ஊடகம்

