டெங்கி அபாயம்; மழை நீர் தேங்காமல் நடவடிக்கை

டெங்கி அபாயம்; மழை நீர் தேங்காமல் நடவடிக்கை

2 mins read
c97c6152-1963-4e1d-8855-79961018e072
தமிழக முதல்வர் பழனிசாமி. கோப்புப்படம் -

சென்னை: டெங்கி காய்ச்­சல் போன்ற பிரச்­சி­னை­க­ளைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள இதுவே உகந்த நேரம் என முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

எனவே, மாநி­லம் முழு­வ­தும் மழை­நீர் தேங்­கா­மல் இருக்க மாவட்ட ஆட்­சி­யர்­கள் உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் தலை­மைச் செய­ல­கத்­தில் இருந்­த­படி காணொளி வசதி மூலம் மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­டன் உரை­யா­டிய முதல்­வர் பழ­னி­சாமி, பருவ மழைக்­கா­லம் தொடங்க இருப்­ப­தால் நகர்ப்­புற, ஊர­கப் பகு­தி­களில் குடி­நீர், சாலை வசதி, திடக்­கழிவு மேலாண்மை ஆகி­ய­வற்­றில் ஆட்­சி­யர்­கள் கூடு­தல் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என அறி­வு­றுத்­தி­னார்.

பருவ கால சவால்­க­ளைத் திறம்­பட கையாள மாவட்ட நிர்­வா­கம் தயார் நிலை­யில் இருக்­க­வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

"பருவ மழைக்கு முன்­ன­தா­கவே நீர்­நிலை உட்­கட்­ட­மைப்­பு­க­ளான கால்­வாய்­கள், அணைக்­கட்­டு­க­ளின் கத­வு­கள் மற்­றும் கரை­க­ளைக் கண்­கா­ணித்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்.

"மாநி­லம் முழு­வ­தும் பர­வ­லாக நல்ல மழை பெய்து வரு­கிறது. விரை­வில் பருவ மழை­யும் தொடங்க இருப்­ப­தால் மாந­க­ராட்சி, நக­ராட்சி, பேரூ­ராட்சி மற்­றும் ஊராட்­சி­கள் உள்­ளிட்ட அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் மழை­நீர் தேங்­கா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டும்," என்­றார் முதல்­வர் பழ­னி­சாமி.

இல்­லை­யெ­னில் டெங்கி கொசுக்­கள் உரு­வா­கும் வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும் என்­றார்.

டெங்கி போன்ற நோய்­கள் ஏற்­ப­டா­மல் தடுக்க போர்க்­கால அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள இதுவே உகந்த நேரம் என்­றும் அவர் மேலும் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் எட்டு மாவட்­டங்­களில் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

மதுரை, சிவ­கங்கை, விரு­து­ந­கர், தேனி, திண்­டுக்­கல், ராம­நா­த­பு­ரம், சேலம், தர்­ம­புரி ஆகிய மாவட்­டங்­களில் தென்­தமி­ழ­கத்­தில் நில­வும் வளி­மண்­டல கீழ­டுக்கு சுழற்சி கார­ண­மாக மழை பெய்­யும் என அந்த மையம் கூறியுள்ளது.