விளை நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

1 mins read
74207b2f-6ad1-47fb-9c20-cba7a9270d9e
கோப்புப்படம்: ஊடகம் -

திருப்­பூர்: விவ­சாய நிலத்­தில் உயர் அழுத்த மின் ­கோ­பு­ரங்­களை அமைக்க தாரா­பு­ரம் விவ­சா­யி­கள் மத்­தி­யில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­உள்­ளது.

திருப்­பூர் மாவட்­டம் தாரா­பு­ரம் அருகே உள்­ளது காதக்­கோட்­டைக் கிரா­மம். இங்கு தனி­யார் காற்­றாலை நிறு­வ­னம் செயல்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில் அந்­நி­று­வ­னம் திடீ­ரென அப்­ப­கு­தி­யில் உள்ள விவ­சாய நிலங்­களில் உயர்­மின் கோபு­ரங்­களை அமைக்­கத் தொடங்கி உள்­ளது. எந்­த­வித முன்­அ­றி­விப்­பு­மின்றி தங்­கள் அனு­ம­தி­யை­யும் பெறா­மல் அந்­நி­று­வ­னம் அத்­து­மீ­று­வ­தாக விவ­சா­யி­கள் சாடி­யுள்­ள­னர்.

மாவட்ட நிர்­வா­கம் உட­ன­டி­யா­கத் தலை­யிட்டு அத்­த­னி­யார் நிறு­வ­னத்­தின் இச்­செ­ய­லைத் தடுக்­க­வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்ள விவ­சா­யி­கள், ஏற்­கெ­னவே அமைக்­கப்­பட்ட உயர் அழுத்த கோபு­ரங்­களை அகற்ற வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே வெள்­ளக்­கோ­வில் பகு­தி­யி­லும் விவாய நிலங்­க ளில் இத்­த­கைய உயர்­ மின் கோபு­ரங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­காக கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட விளை நிலங்­க­ளுக்கு இது­வரை உரிய இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வில்லை எனப் புகார் எழுந்­துள்­ளது.

இதன் கார­ண­மாக நேற்று முன்­தி­னம் அப்­ப­குதி விவ­சா­யி­கள் தங்­கள் கால்­ந­டை­க­ளு­டன் சேர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். தங்­க­ளுக்கு உட­ன­டி­யாக இழப்­பீட்­டுத் தொகையை வழங்­க­வேண்­டும் என்­றும் இனி­மே­லும் தாம­தப்­ப­டுத்­தி­னால் உயிரை மாய்த்­துக்­கொள்­ளப் போவ­தா­க­வும் அவர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.