பெரம்பலூர்: நாட்டார் மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியை தலைமையில் ஆசிரியர்கள் நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றிலைப் பாக்குடன் தாம்பூலத்தட்டில் பள்ளியின் சிறப்புகள் குறித்த விவரங்கள் கொண்ட துண்டுப் பிரசுரத்தையும் கொண்டு மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் செல்கிறார்கள். அப்போது அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்துப் பெற்றோருக்கு விவரிக்கின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மாணவர் சேர்க்கை: தாம்பூலத் தட்டுடன் செல்லும் ஆசிரியர்கள்
1 mins read
படம்: ஊடகம் -

