எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலின்போது கூட்டணி அமைப்பதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ள பிரேமலதா விஜய காந்த், "இம்முறை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார்," எனவும் தெரி வித்துள்ளார்.
விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் கட்சி நடவடிக்கை கள், பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், அண்மையில் சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட தேமுதிக தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புவதாக பிேரமலதா கூறியிருந்தார்.

