தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போயஸ் கார்டனில் கட்டப்படும் பங்களா உட்பட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்

1 mins read
b950d3e2-670e-4e55-bf1b-75210a3a6e91
வரு­மான வரித் துறை அதி­கா­ரி­கள், பினாமி தடுப் புச் சட்­டத்­தின் கீழ் சசி­க­லா­வின் ரூ.300 கோடி மதிப்­பி­லான 65 சொத்­து­களை முடக்­கி­யுள்­ள­னர். படம்: ஊடகம் -

மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் தோழி­யான சசி­கலா, சொத்­துக் குவிப்பு வழக்­கின் தொடர்­பில் பெங்­க­ளூரு சிறை­யில் தண்­டனை அனு­பவித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், வரு­மான வரித் துறை அதி­கா­ரி­கள், பினாமி தடுப் புச் சட்­டத்­தின் கீழ் சசி­க­லா­வின் ரூ.300 கோடி மதிப்­பி­லான 65 சொத்­து­களை முடக்­கி­யுள்­ள­னர்.

இந்த சொத்­து­களில் ஜெய­லலிதாவின் இல்­ல­மான போயஸ் கார்­டன் வேதா நிலை­யத்­திற்கு எதிரே கட்­டிக்­ கொண்­டி­ருக்­கும் புதிய கட்­ட­ட­மும் அடங்­கும்.

அத்துடன் தாம்­ப­ரம், ஆலந்­தூர், திருப்பெரும்­பு­தூர் ஆகிய இடத்­தில் உள்ள சொத்­து­களும் முடக்­கப்பட்­டுள்­ளன.

2017ஆம் ஆண்டு சசி­க­லா­வின் உற­வி­னர்­க­ளுக்கு சொந்­த­மான 180 இடங்­களில் வரு­மான வரித் துறை­யி­னர் சோதனை நடத்தி ரூ.1,600 கோடி மதிப்­புள்ள சொத்து களை முடக்­கி­னர்.

சசி­கலா வரும் 28ஆம் தேதி அல்­லது எதிர்வரும் ஜன­வரி மாதம் சிறையிலி­ருந்து விடு­விக்­கப்பட­லாம் என்று இரு மாறு­பட்ட தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

எனி­னும் தேர்­த­லுக்­கு­முன் அவர் நிச்­ச­யம் விடு­த­லை­யாகி விடு­வார் என்­றும் அவர் ஒரு அர சியல் சக்­தி­யாக மாறா­மல் இருக்க சில காய்­ந­கர்த்­தல்­கள் செய்­யப் படு­வ­தா­க­வும் அர­சி­யல் விமர்­ச­கர் கள் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.