கொவிட்-19: மூன்றரை லட்சம் மக்கள் குணம்

கொவிட்-19: மூன்றரை லட்சம் மக்கள் குணம்

1 mins read
608a3da3-f4c2-4d63-893c-3fc5c9435f7b
இது­வரை மொத்­தம் 355,727 பேர் குணம் பெற்று இல்­லம் திரும்பியுள்­ள­னர். படம்: ஏஎஃப்பி -

தமி­ழ­கத்­தில் கொவிட் -19 கிரு­மித்­தொற்று பர­வும் வேகம் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. நாளும் 5,000க்கும் மேற்­பட்ட மக்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழக சுகா­தா­ரத்துறை வெளி­யிட்­டுள்ள அறிக் கையில், "ஞாயி­றன்று ஒரே நாளில் புதி­தாக 5,956 பேருக்கு கொரோனா தொற்று பாதித்­தி­ருப்­பது உறுதி யானது. இவர்­களில் தமி­ழ­கத் தலை­ந­கர் சென்­னை­யில் மட்­டும் 1,150 பேருக்கு பாதிப்பு ஏற்­பட்­டது.

"இந்த 5,956 பேரை­யும் சேர்த்து தமி­ழ­கத்­தில் இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 428,041 பேராக அதி­கரித்­துள்­ளது.

"இவர்­களில் சென்­னை­யில் மட்­டும் 135,597 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

"மாநி­லத்­தில் மொத்த இறப்பு எண்­ணிக்கை 7,322 ஆக உயர்ந்­துள்­ளது. அதே­நே­ரத்­தில் இது­வரை மொத்­தம் 355,727 பேர் குணம் பெற்று இல்­லம் திரும்பியுள்­ள­னர்.

"52,578 பேர் மருத்­து­வ­மனை அல்­லது வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்­ற­னர். இது­வரை இம் மாநிலத்­தில் 48,13,147 பேருக்கு கொரோனா மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்டுள்ளன," என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்புச் சொற்கள்