தமிழகத்தில் செப்டம்பர் 7 முதல் முழுமையான பேருந்துச் சேவை

தமிழகத்தில் செப்டம்பர் 7 முதல் முழுமையான பேருந்துச் சேவை

2 mins read
03198930-3d86-4a4c-9d80-4a66a7de1e5a
படம்: ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதியிலிருந்து மாவட்டங் களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கி தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து மாவட்டங்களுக்குள் மட்டுமே அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதாவது ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டத்துக்கு பேருந்து செல்ல முடியாது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் தற்போது இம் மாதம் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் போக்குவரத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு வழிகாட்டு நெறிமுறை களுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்திக் குறிப்பில், "கொரோனா கிருமி நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, நோய்த்தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில் மாவட்டத்திற்குள்ளான பொதுப் பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30.9.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 7.9.2020 முதல் தமிழ்நாடு முழு வதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங் களில் மாநிலங்களுக்கு இடையே யான இரயில் போக்குவரத்திற்கு ஏற்னகெனவே அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின் பற்றி, தற்போது 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக் கப்படுகிறது," என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டார்.