திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்த இளைஞர்

திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்த இளைஞர்

1 mins read
5525789a-c80c-4cbb-9050-969780c4c0cd
காரியாபட்டியில் திருநங்கையைக் காதலித்த இளைஞர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். படம்: இந்திய ஊடகம் -

காரியாபட்டியில் திருநங்கையைக் காதலித்த இளைஞர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

காரியாபட்டி கோவிலில் நடந்த திருமணத்தை திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார்.

இதைத்தொடர்ந்து அவர் தனது பெயரை ஹரினா, 24, என்று பெயர் மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தாய்மாமன் கந்தசாமி மகன் கருப்பசாமி, 27, ஓட்டுநராக உள்ளார். இவர் ஹரினாவை காதலித்து வந்தார்.

கருப்பசாமி திருநங்கை ஹரினாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களுடைய பெற்றோர் பின்பு சம்மதம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்