சென்னை மாநகரில் 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது. வியாழக்கிழமை நிலவரத்தை மாநில சுகாதாரத் துறை அறிவித்தது.
தமிழகம் முழுவதும் 5,892 பேருக்குப் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் 24 மணி நேரத்தில் 92 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை 968ஆகக் குறைந்தது.
இதுவரை சென்னையில் மட்டும் 138,724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும் இவர்களில் 123,851 பேர் கிருமித்தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வியாழக்கிழமை சென்னையில் 29 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு கிருமித்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,814 ஆக உயர்ந்தது.
தமிழக மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் வரை பதிவான கிருமித்தொற்று எண்ணிக்கை 445,851. இவர்களில் 386,173 பேர் குணமடைந்துவிட்டனர். வியாழக் கிழமை மட்டும் 6,110 பேர் கிருமி அபாயத்திலிருந்து விடுபட்டு வீடு திரும்பியதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

