'எம்ஜிஆர் ஆக முடியாது'

1 mins read
8401459b-e5c6-4feb-81da-f697154bf9ea
'எம்ஜிஆரின் மறு உருவமே' என குறிப்பிட்டு தேனியில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: நடிகர் விஜய்யின் ரசிகர்கள், எம்ஜிஆரைப் போலவே நடிகர் விஜய்யை சித்திரித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இது குறித்த பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் இடத்தை விஜய்யால் நிரப்ப முடியாது என்றார்.

முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

இதன் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் ேபசினார்.

அப்போது விஜய் ரசிகர்களின் சுவரொட்டி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் இடத்தை நடிகர் விஜய் நிரப்ப முடியாது," என்று குறிப்பிட்டார்.