பூந்தமல்லி: திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு முகக் கவசம் அணியாமல் வந்த புதுமணத் தம்பதிகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆலயங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த நிலையில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முறையாக முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பது குறித்து திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில் குமரன், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் இணை ஆணையர் லட்சுமணன், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் கோவிலுக்கு வந்த புது மணத்தம்பதிகளுக்கும் பக்தர்களுக்கும் அவர்கள் அபராதம் விதித்தனர். அதே சமயத்தில் அவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கி அதிகாரிகள் அறிவுறுத் தினர்.

