எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யத் திட்டம்

எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யத் திட்டம்

1 mins read
d2fcd717-0c46-4672-b48d-6ccb08434d45
கொவிட்-19லிருந்து விடுபட்ட, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.   படம்: ஊடகம் -

கொவிட்-19லிருந்து விடுபட்ட, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நுரையீரல் தொற்றில் இருந்து தனது தந்தை குணமடைந்து வருவதாகவும் அவருக்கு 'பிசியோதெரபி' சிகிச்சை அளித்து வருவதாகவும் எஸ்.பி.பாலாவின் மகன் சரண் தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள காெணாளியில், "எஸ்பிபி உடல்நிலை நன்கு தேறியுள்ளது. கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை ஐபேட் சாதனத்தில் பார்த்து வருகிறார். அவர், தான் பேச நினைப்பதையும் எழுதிக் காண்பித்து வருகிறார்," என்று கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்