சுடச் சுடச் செய்திகள்

கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை

உலகெங்கும் பரவலாக உள்ள வாடகை டாக்சி வசதியைப் போன்றே கோவையில் ஹெலி காப்டர் வசதியும் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

‘பிளானட் எக்ஸ்’ என்ற நிறுவனம் கோவை மாவட்டம், துடியலூரில் நிறுத்திவைத்திருக்கும் தனது ஹெலிகாப்டரை மக்களின் தேவைக்கு ஏற்ப வாடகைக்கு விட்டு வருகிறது.

புகைப்படங்கள்  எடுப்பதற்கும்  ஊரைச் சுற்றிப் பார்க்கவும்  திருமணம் போன்ற நிகழ்வுகளில் மணமக்கள் மீது  மலர்கள் தூவவும்  மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. 

மருத்துவச் சேவை, உறுப்புகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள்  இதர மாநிலங்கள், மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் அவசர தேவைகளுக்கும் இந்த ஹெலிகாப்டர் வசதியை நிறுவனம் வழங்கி வருகிறது. 

அத்துடன், மூணாறு, கூர்க், ஹம்பி, மங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கும் இந்த ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன.   

இந்த ஹெலிகாப்டரில் ஒரு மணி நேரம் வரை புைகப்படங்கள் எடுக்க ரூ.20,000 வசூலிக்கப்படுகிறது. அதுவே ஒருமுறை பயணத்துக்கு ரூ.75,000  கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் ஐவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டரை பராமரித்து வரும்  ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சதீஷ்குமார் கூறுகையில்,  “அரசு அனுமதியுடன், பாதுகாப்பான ஹெலிகாப்டர்களைக் கொண்டு இச்சேவையை எங்களது நிறுவனம் வழங்கி வருகிறது,” என்றார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon