கிருமிப் பரவலை முறியடிக்க போதிய தண்ணீர் வழங்க உத்தரவு

கிருமிப் பரவலை முறியடிக்க போதிய தண்ணீர் வழங்க உத்தரவு

1 mins read
1d7105e1-512c-4b2f-87e4-d8b04bbe2d9f
படம்: ஊடகம் -

கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்க மக்கள் அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தம் பேண வேண்டியுள்ளது.

இதன் காரணமாக தண்ணீர் அதிகம் செலவாகும் என்பதால் சென்னை மக்களுக்கு போதிய தண்ணீர் வழங்கும்படி மெட்ரோ குடிநீர் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை திரும்பும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் போதிய நீர் வழங்கவேண்டும் என வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.