கள்ளக்குறிச்சி: குழந்தை ஒன்று இட்லி சாப்பிட மறுத்து அடம் பிடித்ததால், அந்தக் குழந்தையின் பெரியம்மா அதை அடித்துத் தாக்கியதில் குழந்தை உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் குழந் தையின் பெரியம்மா கைதானார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரோசாரியோ என்பவர் வசித்து வந்தவர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது.
இந்தக் குழந்தையை வளர்ப்பதற் காக இவர் மற்ெறாரு திருமணம் செய்துகொண்டார். ஆனால், குழந் தையை இறந்துபோன மனைவியின் அக்கா (பெரியம்மா) வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குழந்தை இட்லி சாப்பிட மறுத்ததால், ஆத்திரம் அடைந்த பெரியம்மா அடித்ததில் குழந்தை இறந்தது.

