தேர்வுகள் ரத்து: அரசின் முடிவு தவறானது

தேர்வுகள் ரத்து: அரசின் முடிவு தவறானது

2 mins read
92181347-3d3f-4f68-8b40-9ebedb5ec988
ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே. படம்: ஊடகம் -

சென்னை: அனைத்­துப் பாடங்­க­ளி­லும் முழு­மை­யா­கத் தேர்ச்சி பெறாத மாண­வர்­க­ளைத் தேர்ச்சி பெற வைத்த விவ­கா­ரம் கல்­வி­யா­ளர்­கள் மத்­தி­யில் பெரும் சூட்­டைக் கிளப்­பி­விட்டு வரு­கிறது.

"மாணவர்களின் தேர்ச்சி விவ­கா­ரத்­தில் தமி­ழக அரசு தவ­றான முடிவை எடுத்துள்ளது," என்று அகில இந்­திய தொழில்­நுட்­பக் கல்வி மன்­றத்­தின் (ஏஐ­சி­டிஇ) தலைவர் அனில் சஹஸ்­ர­புதே தெரிவித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், தமி­ழ­க­அ­ரசு தனது 'அரி­யர்' மாண­வர்­க­ளின் தேர்ச்சி அறி­விப்பை மீட்டுக் கொள்ளும் என்றும் எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

அதற்­கான அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும் வாய்ப்புள்ளதாகவும் ஊடகத் தக­வல்­கள் தெரி­வித்துள்­ளன.

கொரோனா நோய்த்­தொற்று கார­ண­மாக, இறு­திப் பரு­வத் தேர்­வு­க­ளைத் தவிர பிற பரு­வப் பாடங்­க­ளின் தேர்­வுக்­காக காத்­தி­ருந்த மாண­வர்­க­ளுக்கு தேர்வு எழு­து­வதி­ல் இ­ருந்து விலக்­க­ளித்து, மதிப்­பெண்­கள் வழங்­கப்­படும் என்று முதல்­வர் பழ­னி­சாமி கடந்த ஆகஸ்ட் 26ஆம்தேதி அறி­வித்­தார்.

இந்­நி­லை­யில், இது­கு­றித்து தனி­யார் தொலைக்­காட்­சிக்­குப் பேட்­டி­ய­ளித்த அனில் சஹஸ்­ர­புதே, "அரி­யர்' தேர்வை ரத்து செய்­துள்ள தமிழக அர­சின் முடிவு தவ­றா­னது," என்று தெரி­வித்­துள்­ளார்.

"இந்த தேர்ச்சி குறித்­தான வழக்கு விசா­ர­ணை­யின்­போது அகில இந்­திய தொழில்­நுட்­பக் கல்­விக் குழு தன்­னு­டைய நிலைப்­பாட்­டைத் தெரி­விக்­கும்,'' என்­றும் அனில் சஹஸ்­ர­புதே மேலும் கூறியுள்ளார்.

'அரி­யர்' தேர்வு விவ­கா­ரத்­தில் மாண­வர்­க­ளின் எதிர்­காலத்தை வீணாக்­கா­மல் தேர்ச்­சிக்கு வழி காண­வேண்­டும் என்று திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் வலியுறுத்­தி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, அண்ணா பல்­க­லைக்­க­ழக முன்­னாள் துணைவேந்­தர் பால­கு­ரு­சாமி, "25% மதிப்­பெண்­கள் பெற்று தேர்­வில் தோல்­வி­ய­டைந்­த­வர்­களை­யும் 25 பாடங்­க­ளுக்­கும் மேலாக 'அரி­யர்' வைத்­துள்ள மாண­வர்­க­ளை­யும் ஒரேநேரத்­தில் தேர்ச்சி பெறவைப்­பது என்­பது ஏற்­பு­டை­ய­தல்ல,'' என்று கூறி நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்துள்ளார்.