ரஜினியை நெருக்கும் ரசிகர்கள்

2 mins read
274674ba-60e8-4288-95a3-b20b33b0ab43
பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படும் சுவரொட்டிகளுள் ஒன்று. படம்: சமூக ஊடகம் -

தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான வேலை­களில் அதி­முக, திமுக உள்­ளிட்ட பெரிய கட்­சி­கள் முதல் சிறு கட்­சி­கள் வரை தீவி­ர­மாக இறங்கி உள்­ளன. இன்­னும் ஆறு மாதங்­களில் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்­ப­தால் கூட்­டணி அமைப்­பது குறித்த பேச்­சு­வார்த்­தை­கள் தொடங்­கி­விட்­டன. ஆனால், ரஜினி ரசி­கர்­கள் தங்­க­ளது தலை­வ­ரின் அர­சி­யல் வரு­கையை ஆவ­லோடு எதிர்­பார்த்த நிலை மாறி பொறு­மை­யை இழந்து வரு­கின்­ற­னர்.

ரஜினி இப்­போ­தா­வது கட்­சியை அறி­விப்­பாரா என்று அவர்­கள் கேள்வி எழுப்பி வரு­கின்­ற­னர். தமி­ழ­கத்­தில் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்கு எப்­போ­துமே சுவ­ரொட்­டி­கள்­தான் முன்­ன­ணி­யில் இருக்­கும். அது­வும் பெரும்­பா­லும் மது­ரை­யில் இருந்­து­தான் தொடங்­கும்.

ரஜினி ரசி­கர்­களும் அத­னையே பின்­பற்றி தற்­போது ரஜினி அர­சி­ய லுக்கு வர­வேண்­டும் என்று வற்­பு­றுத்­தும் சுவ­ரொட்­டி­களை ஒட்டி வரு­கின்­ற­னர். மது­ரை­யில் தொடங்கி வேலூர் வரை ஏரா­ள­மான சுவ­ரொட்­டி­கள் கடந்த நான்­கைந்து நாட்­க­ளாக ஒட்­டப்­பட்டு வரு­கின்­றன. கோவை ரசி­கர்­கள் நேற்று முன்­தி­னம் சுவ­ரொட்­டி­கள் மூலம் ரஜி­னிக்கு கோரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர்.

அர­சி­யல் மாற்­றம், ஆட்சி மாற்­றம் இவை எல்­லாம் இப்­போது இல்­லா­விட்­டால் எப்­போது என்று அவர்­கள் தங்­க­ளது தலை­வ­ருக்­குக் கேள்­வி­யாக வைத்து வரு­கின்­ற­னர்.

ஊட­கங்­க­ளி­டம் பேசிய ரஜினி மக்­கள் இயக்­கத்­தைச் சேர்ந்­தோர், "தலை­வர் கட்சி பற்­றியே பேச­மாட்­டேன் என்­கி­றார். இதெல்­லாம் எங்­க­ளுக்கு வருத்­த­மாக உள்­ளது. கூடிய சீக்­கி­ரம் அவர் ஒரு நல்ல முடிவை அறி­விக்க வேண்­டும்," என்று ஆதங்­கப்­ப­டு­கின்­ற­னர்.

2017ஆம் ஆண்­டின் இறு­தி­நா­ளில் தமது ரசி­கர்­களை ராக­வேந்­திரா மண்­ட­பத்­துக்கு வர­வ­ழைத்­துப் பேசிய ரஜினி, "சட்­ட­மன்­றத் தேர்­த­லில் எல்­லாத் தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டு­வோம். போர் வரும்­போது நாங்­கள் களத்­தில் இருப்­போம்," என்று உறு­தி­ப­டக் கூறி­னார். சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன் அர­சி­யல் கட்சி தொடங்­கப்­படும் என்­றும் தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள பதிவு பெற்ற மற்­றும் பதிவு பெறாத தனது ரசி­கர் மன்­றங்­களை ஒன்­றி­ணைத்து இதனை செயல்­ப­டுத்­தப்­போ­வ­தா­க­வும் அப்­போது அவர் தெரி­வித்­தார்.

ஆனால் இது­வரை அரசியல் கட்சி தொடங்­கப்­ப­டு­வ­தற்­கான அறி­குறி எது­வும் தென்­ப­டாத நிலை­யில் ரஜினி ரசி­கர்­கள் தங்­க­ளது ஆதங்­கத்­தை­யும் கோரிக்­கை­யை­யும் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­விக்­கத் தொடங்கி உள்­ள­னர்.

மன்ற நிர்­வா­கி­களும் உறுப்­பி­னர்­களும் ஊட­கங்­க­ளுக்கு அளித்­துள்ள பேட்­டி­யில், "தேர்­த­லுக்கு இன்­னும் ஆறு மாதம்­தான் இருக்கு. இப்­போ­து­கூட அர­சி­யல் முடிவை தெளி­வாக அறி­விக்­க­மாட்­டேன் என்­கி­றார் தலை­வர். பூத் கமிட்டி அமைக்­கச் சொன்­னார் தலை­வர். அதைச் செய்­து­கொண்டு இருந்­தோம். அந்­தப் பணி சில மாவட்­டங்­களைத் தவிர 40 விழுக்­கா­டு­கூட பூர்த்­தி­யா­காத நிலை­யில் கொரோனா பிரச்­சினை வந்­த­தால் எல்­லாம் நின்று போய்­விட்­டது," என்­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, விக­டன் இத­ழி­டம் பேசிய திரைப்­பட இயக்­கு­நர் எஸ்பி ஜன­நா­தன், ரஜினி அர­சி­ய­லுக்கு வர­மாட்­டார் என்று கூறி­யுள்­ளார்.

"ரஜி­னி­யைப் பொறுத்­த­வரை கண்­டிப்பா அர­சி­ய­லுக்கு வர­மாட்­டார். அவ­ரைத் தேவை­யில்­லா­மல் இழுக்­கி­றாங்க. இங்கே நடந்­துட்டு இருக்­குற எல்­லாமே சந்­தைக்­கான வணி­கம். அவ­ரோட குர­லுக்கு வீச்சு அதி­கம்­கி­ற­தால் அவ­ரைப் பயன்­ப­டுத்­திக்­கப் பார்க்­கு­றாங்க," என்­கி­றார் ஜன­நா­தன்.

இதற்கிடையே, சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.