மக்களைத் திணித்துக்கொண்டு செல்லும் மதுரை பேருந்துகளால் கிருமி பரவும் அச்சம்

மக்களைத் திணித்துக்கொண்டு செல்லும் மதுரை பேருந்துகளால் கிருமி பரவும் அச்சம்

1 mins read

மதுரை: மது­ரை­யில் இயங்­கும் 50% அர­சுப் பேருந்­து­களில் அர­சின் வழி­காட்டி நெறி­மு­றை­கள் எது­வும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. ஏனெ­னில், அந்த அள­வுக்கு மக்­களை நிறைத்­துக்­கொண்டு பேருந்­து­கள் செல்­வ­தாகக் கூறப்­ப­டு­கிறது.

பெரும்­பா­லான பேருந்­து­களில் கொரோனா தடுப்பு விதி­மு­றை­கள் எது­வும் பின்­பற்­றப்­ப­டா­த­தால் பேருந்­து­கள் மூலம் கொரோனா தொற்று அதி­க­ரிக்­கும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு பேருந்­தில் 60% பய­ணி­கள் மட்­டுமே பய­ணம் மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், சில நேரங்­களில் 100% பய­ணி­கள் பேருந்தில் ஏறி­வி­டு­கின்­ற­னர்.

நடத்­து­நர்­க­ளின் பேச்­சை­யும் அவர்கள் கேட்­ப­தில்லை. மீறி கட்­டுப்­ப­டுத்­தி­னால் நடத்­து­நர், ஓட்­டு­நரு­டன் பய­ணி­கள் வாக்குவாதத்­தில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

அத்துடன், பேருந்­தின் பின் படிக்­கட்டு வழி ஏறி முன் படிக்­கட்டு வழியே பய­ணி­கள் இறங்­குவது, முகக்­க­வ­சம் அணிவது, சமூக இடை­வெ­ளி­யு­டன் இருக்கை யில் அமர்வது என பெரும்­பா­லான பேருந்துகளில் இவை எதுவும் கடைப்­பி­டிக்­கப்­ப­டுவதில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. ­