விரைவில் 5 லட்சம் நெருங்கும் பாதிப்பு

விரைவில் 5 லட்சம் நெருங்கும் பாதிப்பு

2 mins read
a5a56aad-4aa7-41ca-8295-c64a7c2bc2c5
சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்போரின் உடல்வெப்ப நிலையைப் பரிசோதிக்கும் சுகாதாரத்துறை ஊழியர். படம்: ஏஎப்பி -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை விரை­வில் 5 லட்­சத்தை நெருங்க உள்­ளது.

ஆனால், இந்த அள­வுக்கு பாதிப்­பு­கள் அதிகரித்து இருந்­தா­லும் உயி­ரி­ழப்­பு­கள் கடந்த சில தினங்களாகக் குறைந்து வரு­வ­தா­க­வும் குணம் அடை­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வருவதாக ­வும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இந்த கொரோனா பாதிப்­பு­கள் குறித்த புள்­ளி­வி­வ­ரங்­களை தமி­ழக சுகா­தா­ரத்­துறை அதிகாரிகள் வெளி­யிட்­டுள்­ளனர்.

அதன்­படி, "வியா­ழன் அன்று ஒரே­நா­ளில் மேலும் 5,528 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டனர். இவர்களையும் சேர்த்து, தமி­ழ­கத்­தில் இத்தொற்றால் பாதிக்­கப்­பட்டவர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 486,052 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

"தமி­ழ­கத்­தில் வியாழனன்று கிருமி பாதிப்பால் மேலும் 64 பேர் உயி­ரி­ழந்த நிலை­யில், இது­வரை பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 8,154 ஆக உயர்ந்­துள்­ளது.

"கொரோ­னா­வில் இருந்து வியாழனன்று 6,185 பேர் மீண்டு வீடு திரும்­பினர். இதன்மூலம், மொத்தம் 429,416 பேர் குண­மடைந்துள்ளனர்.

"சென்­னை­யில் அதி­க­பட்­ச­மாக 991 பேருக்­குத் தொற்று இருந்தது. இவர்களுடன், சென்­னை­யில் பாதிக்கப்பட்டோர் எண்­ணிக்கை 145,606 ஆக உயா்ந்­துள்­ளது.

"சென்­னை­யில் குண­மடைந்தோா் எண்­ணிக்கை 131,840 பேராகவும் உயி­ரி­ழப்பு 2,921 ஆகவும் உயா்ந்­துள்­ளது.

"தமிழகத்தில் 163 பரி­சோ­தனை மையங்­கள் உள்­ளன. வியாழனன்று ஒரேநாளில் 85,473 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன்­மூ­லம் இதுவரை 56,30,323 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

"இது­வரை பாதிக்­கப்­பட்­ட­வா்­களில் 0-12 வய­து­டை­ய­வா்­கள் 21,399 போ். 13-60 வய­து­டை­ய­வா்­கள் 401,255 போ். 60 வய­துக்கு மேற்­பட்­ட­வா்­கள் 63,398 போ்," என்று சுகாதார அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கொடிய கிருமித் ெதாற்றை குணப்படுத்துவதற்கான தடுப்­பூ­சி­களைக் கண்­டு­பி­டிப்­ப­தில் பல்­வேறு நாடு­களும் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன.