ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

1 mins read

சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு சென்னை உயர் நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

ஏஆர் ரஹ்மான் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறை அண்மையில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஏ ஆர் ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

"இந்த பணம் தொடர்பாக 50% வரி ஏற்கெனவே செலுத்தப்பட்டு விட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் தற்போது ஏன் இதை பிரச்சினை ஆக்குகிறார்கள் என்றே தெரியவில்லை," என்று ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பினர் விளக்கம் கூறியுள்ளனர்.

முன்னதாக வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட பெரிய தொகைக்கு உரிய வரி செலுத்தாமல் இசை யமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியது.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு சொந்த மான அறநிறுவனத்துக்கு வெளி நாட்டில் இருந்து பணம் பெறு வதற்கான அனுமதி அளிக்கப் படவில்லை என்றபோதிலும் அந்த அறநிறுவனத்தின் கணக்கில் பெருமளவு பணம் செலுத்தப் பட்டுள்ளது என்றும் இதற்கு உரிய வரி செலுத்தவில்லை என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.