தாண்டவமாடிய வறுமை; ஆண் குழந்தை ரூ.80,000க்கு விற்பனை

தாண்டவமாடிய வறுமை; ஆண் குழந்தை ரூ.80,000க்கு விற்பனை

1 mins read

பொள்ளாச்சி: ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவதாக பிறந்த குழந்தையைத் தங்களது குடும்ப வறுமையின் கார ணமாக ஒரு தம்பதியர் ரூ.80,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

இந்த தகவல் கோவை குழந்தை கள் நல அலுவலக அதிகாரிகளின் காதில் விழ, அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானதால், குழந்தையைப் போலிசார் மீட்டனர்.

பொள்ளாச்சி அருகில் உள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வர் முருகவேல். மாற்றுத்திறனாளி. இவரின் மனைவி சுதா. இவர் களுக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

வறுமையின் பிடியில் இருந்த அவர்களுக்கு நான்காவதாக பிறந்த குழந்தையை வளர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந் தையை விற்றுவிட முடிவெடுத்த தம்பதிகள், இதுகுறித்து பெளலினா என்ற பெண்ணிடம் பேசியுள்ளனர்.

இதையடுத்து, கோவை செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார்-கோகிலா தம்பதியருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததை அறிந்த பெளலினா, குழந்தையை அவர்க ளிடம் விற்றுள்ளார். இதற்காக ரூ.80,000 பணமும் கைமாறியுள்ளது.

போலிசாரின் விசாரணை மேலும் தொடர்கிறது.