மதுரையிலும் ஒரு நவீன ஷாஜகான், மறைந்த மனைவிக்கு சிலை

மதுரையிலும் ஒரு நவீன ஷாஜகான், மறைந்த மனைவிக்கு சிலை

2 mins read
b589c104-2e9f-49a8-91bd-9db9d61806c6
-
multi-img1 of 2

மதுரை: காதல் மனைவி மும்­தா­ஜுக்­காக ஷாஜ­கான் கட்­டிய தாஜ்­ம­கால் போல், ஆங்­காங்கே காதல் கண­வர்­கள் பல­ரும் தங்­கள் மனை­விக்­காக கோவில்களையும் சிலை­களையும் வடித்து வரு­கின்­ற­னர்.

அண்­மை­யில் கர்­நா­டக மாநி­லத்­தைச் சேர்ந்த ெதாழிலதி­பர் ஸ்ரீநி­வாஸ் குப்தா தனது மனை­விக்­காக சிலை வைத்தார்.

அவரைப்போன்றே மற்றொரு நவீன கால ஷாஜகானாகக் கருதப் படும் சேது­ரா­மன் என்பவரும் 6 அடி உய­ரம் கொண்ட தனது மனைவியின் சிலையைத் தத்­ரூ­ப­மாக வடித்து வீட்டில் வைத்துள்ளார்.

மது­ரை­, மேல பொன்­ன­ந­க­ரத்­தைச் சேர்ந்த தொழிலதி­பர் சி.சேது­ரா­மன், 74, தனது மனைவி இறந்த 30வது நாளில் அவ­ரது சிலையை மதுரை வில்­லா­பு­ரத்தைச் சேர்ந்த சிற்­பி­ பிர­சன்னா, ஓவி­யர் மதுரை மருது ஆகி­யோரைக் கொண்டு வடி­வ­மைத்­துள்­ளார்.

இவ­ரது மனைவி பிச்­சை­மணி, 68, கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உடல்­ந­லக்குறை­வால் காலமானார்.

கடந்த 48 ஆண்­டு­களாக இணைந்து வாழ்ந்­த இந்த தம்பதி களுக்கு மூன்று மகள்­கள். அனை வருக்கும் திரு­ம­ண­மாகி விட்­டது.

சிலை வைத்தது குறித்து சேதுராமன் கூறுகையில், "என்­னு­டைய சிரம­கா­லத்­தி­லும் மகிழ்ச்சி யான நாட்­க­ளி­லும் 48 ஆண்­டு­கள் உட­னி­ருந்த மனை­வி­யின் மறைவை என்னால் தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. அவர் இல்­லாத வீட்டைப் பார்க்கவே வேத­னை­யாக இருந்­தது. எனவே, வீட்­டில் அவ­ருக்கு சிலை வைத்தேன்.

"இந்த சிலையை பார்க்­கும்­போதெல்­லாம் எனது மனைவி என்­னு­டன் இருப்­பது போலவே உண­ருகிறேன். தின­மும் காலையில் அவரை வணங்­கிய பிறகுதான் எந்த ஒரு காரியத்தையும் தொடங்­கு­வேன்," என்றும் அவர் கூறி­னார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் அவர்களின் மாமியார்தான் இந்த பிச்சைமணி என்று கூறப்படுகிறது. பிச்சைமணியை அவரது உறவினர்களும் மலர்தூவி வழிபட்டனர்.

மனைவி பிச்சைமணி இறந்து 30 நாட்களான நிலையில், அவ ரைப்போன்றே அச்சு அசலாக வடிவமைக்கப்பட்ட ஃபைபர் சிலையை வீட்டில் வைத் துள்ளார் சேதுராமன். தினமும் இவர் மனைவியைக் கும்பிட்டுத் தான் பணியைத் தொடர்கிறார்.

படங்கள்: தமிழக ஊடகம்