தமிழக அரசு: இடைத்தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை
சென்னை: தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்று தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.
"மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் அடுத்த சில நாட்களில் கொவிட்-19 கிருமித்தொற்றால் அதிக அளவில் பாதிப்புக்கு ஆளாகும் அச்சம் உள்ளது.
"தற்போதுள்ள தொற்று பாதிப்பு எண்ணிக்கையைக் கொண்டு கணித்தால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது புலனாகிறது.
"இதன்காரணமாக, கிருமிப் பரவல் அச்சத்தை எதிர்கொள்ளும் வகையில் ஐந்து மாவட்டங்களிலும் கூடுதல் மருத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன," என்று சண்முகம் மேலும் ெதரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள மாநிலங்களில் தமிழகமும் முக்கிய ஒன்றாக உள்ளது. இம்மாநிலத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிள் எண்ணிக்கை விரைவில் ஐந்து லட்சத்தை எட்ட உள்ளது.
இந்நிலையில், ெதாலைக்காட்சி ஒன்றுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி அளித்தபோது, "அதிகரித்துவரும் கொவிட்-19 தொற்று காரணமாக தமிழகத்தில் இப்போதைக்கு இடைத்தோ்தல் நடத்தவேண்டாம் என தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
"இந்த காலகட்டத்தில் இடைத்தேர்தல் தேவையற்றது. இதுபற்றி ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசும் கடிதம் எழுதியுள்ளது.
"மாநிலம் முழுதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அடுத்த 10 நாட்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தீவிரம் அடையும் பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
"தமிழகத்தில் இன்னும் ஆறேழு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை," என்று கூறினார்.
ஐந்து மாவட்டங் களில் கொரோனா கிருமி பரவும் வேகம் அடுத்த 10 அல்லது 15 நாட்களில் புதிய உச்சம் தொடும் அச்சமுள்ளது. இதனால், மருத்துவக் கட்ட மைப்புகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர்
கே.சண்முகம்

