சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் உற்பத்தி அமோகமாகி இருப்பதை அடுத்து உடனடியாக சேமிப்பு கிடங்குகளை இரண்டு மடங்காக்கும்படி அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நெல் விளைச்சல் உச்ச அளவை எட்டி வருவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
அணைக்கட்டுகளில் நீர் நிரம்பி இருப்பதும் மழை பெய்து வருவதும் பூச்சிகள் காரணமாக பயிர்கள் நாசமாகாமல் இருப்பதும் விவசாயிகளிடம் காணப்படும் அபரிமிதமான ஊக்கமும் நெல் விளைச்சலுக்கு முக்கியக் காரணங்கலாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறுவை சாகுபடி சாதனை அளவுக்கு அதிகரித்து விட்டதாகவும் அவற்றைக் கையாளும் அளவிற்கு மாநிலத்தில் கொள்முதல் நிலையங்கள் இல்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.

