சென்னை: அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக நேற்று தமிழக ஊடகங்கள் தெரி வித்தன.
மத்திய அமலாக்கத் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவை குறிப் பிட்டன.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் சந்தீப் ஆனந்த் இருவர் பெயரிலும் இந்திய மத்திய வங்கியான ஆர்பிஐயிடம் அனுமதி பெறாமல் சிங்கப்பூரைச் சேர்ந்த சில்வர்பார்க் இண்டர் நேசனல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து விதிகளுக்கு புறம்பாக சிங்கப்பூரில் முதலீடு செய்த வழக்கில் ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை அம லாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர். இந்த நடவடிக்கை நேற்று முன்தினம் இரவு முதல் எடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
தமிழகத்தில் உள்ள அவரது விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு, அவர்களது வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கப் பட்டுள்ளதாக அமலாக்கத்துறை யினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

