தமிழகத்தில் 'நீட்' தேர்வு பயத்தில் ஒரேநாளில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு ஒருபுறம் போராட்டம்; மறுபுறம் நீட் தேர்வு எழு திய மாணவர்கள்

2 mins read
33b1398f-9505-409b-b5e4-b14b5cccf095
தேர்வெழுதும் மாணவர்கள். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் ஒரு­பு­றம் நீட் தேர்வை ரத்து செய்­ய­வேண்­டும் என்ற போராட்­டம் வெடித்­துக் கொண்­டி­ருக்க, மற்­றொ­ரு­பு­றம் லட்­சக்­க­ணக்­கான மாண­வர்­கள் நீட் தேர்வை எழு­தி­னர். எம்­பி­பி­எஸ், பிடி­எஸ் ஆகிய மருத்­து­வப் படிப்புக்கான 'நீட்' எனப் படும் தேசிய தகுதி நுழை­வுத் தேர்வு நேற்று நாடெங்கும் நடந்தது. தமி­ழ­கத்­தில் 117,990 மாண­வர்­கள் இத்­தேர்வை எழு­தி­னர்.

கொரோனா கிரு­மிப் பர­வ­லின் தாக்­கம் இன்­னும் முழு­மை­யாக கட்­டுக்­குள் வராத நிலை­யில், பள்ளி, கல்­லூ­ரி­க­ளை­த் திறப்­ப­தற்கு மத்­திய, மாநில அர­சு­கள் தயக்­கம் காட்டி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், நீட்­தேர்வை ரத்து செய்­யும்­படி பொது­மக்­களும் திமுக உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­களும் தீவிர மாக வலி­யு­றுத்தி வந்­த­ன. மதுரை நரிமேடு பகுதியிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதற்கிடையே, தரு­ம­பு­ரி­யில் தேர்வு பயத்­தில் தனது உயிரை விட்ட மாண­வர் ஆதித்­யா­வின் உடலை வாங்க மறுப்பு தெரி­வித்து, தரு­ம­பு­ரி­யில் உள்ள மருத்­து­வ­மனை வளா­கம் முன்பு அவ­ரது உறவினர்­கள் போராட்­டம் நடத்­தி­னர்.

"நீட் தேர்வை ரத்து செய்­தால் தான் உடலை வாங்­கு­வோம்," என் றும் அவர்­கள் முழக்கமிட்டனர்.

இந்­நி­லை­யில், திட்­ட­மிட்­ட­படி நேற்று பிற்­ப­கல் 2 மணி முதல் மாண­வர்­கள் தேர்வை எழு­தி­னர். இதற்கிடையே, இந்த நீட் தேர்வு பயத்­தால் எலந்­தங்­கு­ழி­யைச் சேர்ந்த மாண­வர் விக்­னேஷ் கடந்த 9ஆம் தேதி தனது உயி­ரை­விட்­டார்.

அந்த சோகம் மறை­வ­தற்­குள் சனிக்­கி­ழ­மை­யன்று ஒரே­நா­ளில் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தர்­ம­புரி மாண­வர் ஆதித்யா, திருச்­செங்­கோடு மாண­வர் முருகேசன் ஆகிய மூவ­ரும் நீட் தேர்வு பயம் கார­ண­மாக உயிரை விட்­டுள்­ள­னர்.

இந்த சம்­ப­வம் குறித்து, தேமு­திக கட்­சித் தலைவர் விஜயகாந்த் கூறுைகயில், "நீட் தேர்­வுக்­குப் பயந்து உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் முடிவை மாண­வர்­கள் கைவிட வேண்­டும். வருங்­கா­லம் என்­பது இளை­ஞர்­க­ளின் கையில் உள்­ளது," எனத் தெரி­வித்­துள்­ளார்.

முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி தனது பதி­வில், "மாண­வச் செல்­வங்­கள் இது­போன்ற விப­ரீத முடி­வு­களை எடுப்­பது மிகுந்த மன வேதனை அளிக்­கிறது. வாழ்­வில் வெற்­றி­பெற எண்­ணி­ல­டங்கா வழி­கள் உள்­ளன. மாண­வர்­கள் மன உறு­தி­யை­யும் விடா­மு­யற்சியையும் வளர்த்­துக்­கொண்­டால் வெற்றி நிச்­ச­யம்," என்று கூறியுள்­ளார்.

திமுக தலை­வர் மு.க ஸ்டா­லின், "திமுக ஆட்­சி­யில் நீட் தேர்வு ரத்து செய்­யப்­படும். வாய்ப்பை இழந்­த­வர்­க­ளுக்கு பொதுத்­தேர்வு அடிப்­ப­டை­யில் மருத்­து­வம் படிக்க வாய்ப்பு உரு­வாக்­கப்­படும். இது உறுதி," என்று தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், டுவிட்­ட­ரில் நீட் தேர்வை தடை செய்து தமி­ழக மாண­வர்­களைக் காப்­பாற்றவேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் 'ஹேஷ்­டேக்' பலராலும் பகிரப்பட்டு வந்தது.