ரஜினி முதல்வர் வேட்பாளர் என சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது விரைவில் நடவடிக்கை

1 mins read
77326045-7a1c-4e66-91e9-7fbc6a49e9df
-

தூத்­துக்­குடி: ரஜினி மக்­கள் மன்­றத்தில் இருந்து கடந்­தாண்டு நீக்­கப்­பட்ட சிலர் திமு­க­வில் இணைந்­துள்ள நிலை­யில், அவர்­கள்­தான் 'ரஜினி முதல்­வர் வேட்­பா­ளர்' என சுவ­ரொட்டி ஒட்­டி­யுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் கடந்த சில நாட்­க­ளாக, ரஜி­னி­யின் அர­சி­யல் பிர­வே­சம் குறித்து அவ­ரது அனு­ம­தி­யின்றி ரஜினி மக்­கள் மன்றம் என்ற பெய­ரில் சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்டு வந்­தன.

இது­கு­றித்து நடத்­தப்­பட்ட விசாரணை­யில், மக்­கள் மன்­றத்­துக்­குள் குழப்­பம் ஏற்­ப­டுத்­தவே அவர்­கள் இவ்­வாறு செய்­துள்­ள­தா­க­வும் இதன் கார­ண­மாக அவர்­கள்­மீது விரைவில் நடவடிக்கை எடுக்­கப்­பட உள்­ள­தாகவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து மக்­கள் மன்ற நிர்­வாகி சுதா­கர் வெளி­யிட்­டுள்ள உத்­த­ர­வில், "மன்­றத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­வர்­கள் யாரு­ட­னும் தொடர்பு வைத்­துக்­கொள்­ளக் கூடாது," என்று கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, யார் புதிய கட்சி ஆரம்­பித்­தா­லும் அத­னால் அதி­முகவிற்கு எந்த ஒரு பாதிப்­பும் இல்லை என அமைச்­சர் கடம்­பூர் ராஜு கூறி­யுள்­ளார். நடி­கர் ரஜினி மட்­டு­மல்ல, வேறு யார் புதிய கட்­சியை ஆரம்­பித்­தா­லும் அதனால் அதி­மு­க­விற்கு பாதிப்பு வரப்­போவது கிடை­யாது.

இதனால் திமு­க­விற்குத் தான் பாதிப்பு ஏற்படும் என்­று செய்தி மற்­றும் விளம்­ப­ரத்­துறை அமைச்­சர் கடம்­பூர் ராஜு தெரிவித்­துள்­ளார்.

தூத்­துக்­குடி மாவட்­டம், கோவில்­பட்டி அருகே உள்ள மந்­தி­தோப்பு என்ற இடத்­தில் நலத்திட்ட உதவி களை வழங்கியவர், 30 திரு­நங்­கை­களுக்கு அரசு சார்­பில் கட்­டிக்­கொடுக்­கப்­பட்ட புதிய வீடு­களை வழங்­கினார். அதன்பின்­னர் அவர் செய்தியாளர்­க­ளி­டம் பேசியபோது இவ்­வாறு தெரி­வித்­தார்.