தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த தினத்தையொட்டி, அம்மாநிலத்தின் காவல்துறையையும் சீருடைக் குழுவையும் சேர்ந்த 131 பேருக்கு மறைந்த முதல்வரின் பெயரில் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
காவல் துறை, தீயணைப்பு சிறைத்துறை, ஊர்க்காவல் படை, உள்ளிட்ட சீருடைக்குழுக்களில் சிறப்பாகப் பணியாற்றியோரை கௌரவிக்கும் பொருட்டு இந்த விருது ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இத்தகைய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

