இரண்டே நாளில் இரண்டு கோடி ரூபாய் அபராதம் வசூல்

இரண்டே நாளில் இரண்டு கோடி ரூபாய் அபராதம் வசூல்

1 mins read
1e992ea3-089c-401b-882c-fe3363155e9d
சென்னையில் கொவிட்-19 பரவல், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வுக்கு 'பூம்பூம்' மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. படம்: ஏஎஃப்பி -

சென்னையில் கொரோனா கிருமித்தொற்றை முறியடிக்கும் வகையில் பொது முடக்கம் நடப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த சமயத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதையெல்லாம் மீறியவர்களிடம் இருந்து இரண்டே நாளில் ரூ.1.93 கோடி வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து இந்த அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டை, பெருங்குடி, அம்பத்தூரில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்