வயதான தம்பதிகள் நான்கு கழுதைகளை தங்களது குழந்தைகள்போல சூட்டி வளர்த்து வருகின்றனர்.
அந்தக் கழுதைகளும் வருமானத்தை ஈட்டிக்கொடுத்து தம்பதியைக் கைவிடாமல் காப்பாற்றி வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூர் ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 75. இவரது மனைவி செல்லம்மாள், 70.
கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த இத்தம்பதியருக்கு போதிய வருமானம் கிடைக்காததால், இவர்கள் தங்களது குலத்தொழிலான கழுதைப்பால் விற்பனையைத் தொடங்கினர். கழுதைப் பாலில் நோயெதிர்ப்பு சக்தி இருப்பதாக மக்கள் பரவலாக நம்புவதால், கொரோனா காலத்தில் கழுதைப்பால் விற்பனை களைகட்டியுள்ளது.
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் ஓரளவு நிம்மதியான வாழ்வை கழுதைகளின் உதவியுடன் கழித்து வருகின்றனர் தம்பதிகள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கழுதைகளோடு நடந்து சென்று, கழுதைப்பால் விற்பனை செய்து பிழைப்பை நடத்திவரும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்தக் கழுதைகளையே குழந்தைகள் போல பாவித்து வளர்த்து வருகின்றனர்.
"இந்த கழுதைகள்தான் எங்களுக்கு சோறு போடும் குழந்தைகள்," என உருக்கமாகக் கூறியுள்ளனர் அந்தத் தம்பதி.

