தங்கக் கடத்தலில் சென்னை முதலிடம்

இந்திய நாடெங்கும் உள்ள விமான நிலையங்களில் சென்னை விமான நிலையத்தில் மட்டுமே அதி­க­ள­வில் வெளி­நா­டு­க­ளி­ல் இ­ருந்து தங்கம் கடத்தி வரப்­படுவதாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த 2019-20ஆம் ஆண்­டில் நாடு முழு­வ­தும் உள்ள விமான நிலை­யங்­களில் கடத்­தப்பட்ட தங்­கம் தொடர்­பான விவரங்­களை மத்­திய நிதி அமைச்­ச­கம் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்­ளது.

இதன்­படி, 2019-20ஆம் ஆண்­டு­களில், மொத்­தம் ரூ.858 கோடி மதிப்­புள்ள 2,629 கிலோ கடத்­தல் தங்­கம் நாடெங்கும் உள்ள விமான நிலை­யங்­களில் கைப்­பற்­றப்­பட்டன.

இதில், ஆக அதி­கமாக சென்னை விமான நிலை­யத்­தில் மட்­டும் வெளி­நா­டு­க­ளில் இ­ருந்து ரூ.134 கோடி மதிப்­புள்ள 375 கிலோ தங்­கம் கடத்தி வரப்­பட்டு, பறி­முதல் செய்­யப்­பட்டுள்ளது.

இவை நாடெங்­கும் பறி­மு­தலான கடத்­தல் தங்­கத்­தில் பாதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளை­குடா, தெற்கு ஆசிய நாடு­க­ளில் இருந்தே சென்­னைக்கு அதி­க­ள­வில் தங்­கம் கடத்­தி­வ­ரப்­பட்டுள்ளதும் தெரி­ய­வந்­துள்­ளது.

தங்­கத்தை இந்­தி­யா­விற்­குள் கடத்துவ­தில் கேரளா முத­லி­டத்­தில் உள்ளதாக சுங்­கத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்துள்ளன. அதா­வது, அங்­குள்ள கொச்சி, கோழிக்­கோடு, கண்­ணூர் விமான நிலை­யங்­கள் வழி­யாக 444 கிலோ கடத்­தல் தங்­கம் கடந்த 2019-20ஆம் ஆண்­டில் கடத்தப்பட்டு பிடி­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!