செப்டம்பர் 24 முதல் இணையம் வழி தேர்வெழுதும் பல்கலைக்கழக மாணவர்கள்

தமி­ழ­கப் பல்­க­லைக் கழ­கங்­கள் இறு­தி­யாண்டு மாண வர்­க­ளுக்­கான பரு­வத் தேர்வை இணை­யம் வழி நடத்த உள்­ள­தாக அறி­வித்­துள்­ளன.

செப்­டம்­பர் 24 முதல் 29ஆம் தேதி வரை, ஒரே­நா­ளில் நான்கு வெவ்­வேறு வித­மான பாடங்­க­ளுக்கு தேர்­வு­கள் நடை­பெற உள்­ளன.

இணை­யம் வழி நடத்­தப்­பட உள்ள அண்ணா பல்­க­லைக்­கழ கத்­தின் இறு­திப் பரு­வத் தேர்வை எழு­து­வ­தற்கு மாண­வர்­க­ளுக்கு ஒரு மணி நேரம் மட்­டுமே கால அவ­கா­சம் தரப்­பட்டு உள்­ளது.

வழக்­க­மாக இந்த தேர்­வு­கள் மூன்று மணி நேரம் நடத்­தப்­படும்.

“கேள்­விக்­கான நான்கு விடை களில் ஒரு சரி­யான விடை­யைத் தேர்ந்­தெ­டுத்து எழு­தும் வகை­யில் வினாத்­தாள் வடி­வ­மைக்­கப் பட்­டி­ருக்­கும்,” என்று அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இணை­யம் வழி ஒன்­றரை மணி நேரம் தேர்வு நடக்­கும் என்­றும் மாண­வர்­கள் 18 பக்­கங்­க­ளுக்கு மிகா­மல் கேள்வி களுக்­கான பதிலை எழுதி இணை யத்­தில் பதி­வேற்­றம் செய்­ய­வேண்­டும் என்­றும் சென்னை பல்­க­லைக்­க­ழ­கம் தெரி­வித்­துள்­ளது.

“பதி­வேற்­றம் செய்­ய­மு­டி­யாத மாண­வர்­கள், விரைவு தபால் மூலம் கல்­லூரி முதல்­வ­ருக்கு கிடைக்­கும் வகை­யில் அதை அனுப்­பி­வைக்க வேண்­டும்,” என்று சென்னை பல்க லைக்­க­ழ­கம் அறி­வு­றுத்தி உள்­ளது.

தமி­ழ­கம் முழு­வ­தும் கொரோனா கிரு­மிப் பர­வ­லின் தீவி­ரம் காரண மாக இறு­தி­யாண்டு மாண­வர் களைத் தவிர மற்ற பரு­வத் தேர்வு களை எழு­தும் மாண­வர்­க­ளுக்கு தேர்­வின்றி தேர்ச்சி என்று அறி­விக்­கப் பட்­டது.

இந்­நி­லை­யில், கிரு­மித் தொற்­றின் தாக்­கம் இருந்­தா­லும், இறு­தி­யாண்டு கல்­லூரி பரு­வத் தேர்வை கண்­டிப்­பாக நடத்­தியே ஆக­வேண்­டும் என்று தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, மதுரை காம­ரா­ஜர், மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார், காரைக்­குடி அழ­கப்பா உள்ளிட்ட பல்­க­லைக்­கழகங்­களும் சென்னை பல்­க­லைக்கழ­கத்­தின் அறி­விப்­பையே பின்­பற்ற உள்­ள­தா­கவும் முன்னதாக தெரி­வித்திருந்­தன.

இந்­நி­லை­யில், கல்­லூரி மாண­வர்களுக்கு வீட்­டில் இருந்தே தேர்வு நடத்­தும் முறை கேலிக்­கூத்­தா­னது என்று அண்ணா பல்­க­லைக்­க­ழக முன்­னாள் துணை­வேந்­தர் பால குரு­சாமி கடு­மை­யாக விமர்­சித் துள்­ளார்.

விடைத்­தாள்­களை ஒப்­ப­டைக்க அதிக நேரம் இருப்­ப­தால் மாண­வர்­கள் முறை­கே­டு­களில் ஈடு­பட அதி­க­மான வழி­கள் உள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

பள்ளி அள­வி­லான மாண­வர்­க­ளுக்கு நீட் போன்ற தேர்­வு­கள் சிறப்­பாக நடை­பெற்று முடிந்­தி­ருக்­கும் நிலை­யில், கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு தேர்வு நடத்­து­வ­தில் என்ன சிக்­கல் உள்­ளது என்­றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon