எதிர்ப்பு தெரிவித்தால் சிறைத் தண்டனை

தமிழகத்தில் கொரோனா கிருமி பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது. செவ்வாயன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு இத் தொற்று பாதிப்பு இருந்தது உறுதியானது. இவர்களுடன் மாநிலத்தில் மொத்தம் 514,208 பேர் கிருமிப் பரவ லால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் மட்டும் ஆக அதிகமாக 150,578 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செவ்வாயன்று ஒரே நாளில் 68 பேர் உயிர் இழந்தனர். இவர்களுடன் இதுவரை 8,502 பேர் இத்தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை 458,900 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது மாநிலத்தில் 46,806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000க்கு கீழ் குறைந்துள்ளது. இதுவரை 137,685 பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா கிருமித் தொற்றால் இறந்தவர்களின் உடலைப் புதைக்கவும் எரியூட்டவும் எதிர்ப்பு தெரிவித்தால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதேபோல, கொரோனா கிருமித் தடுப்புப் பணியாளரைத் தாக்கினாலும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon