சுடச் சுடச் செய்திகள்

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை 10 நாட்களுக்குப் பிறகு மீட்பு

சென்னை ராய­பு­ரத்­தில் இருந்து கடத்­தப்­பட்ட பெண் குழந்தை ஒன்­றை பத்து நாட்­க­ளுக்குப் பிறகு போலி­சார் பத்­தி­ர­மாக மீட்­டுள்­ள­னர்.

செங்­கல்­பட்டு மாவட்­டம், நாவ­லூ­ரில் இருந்து குழந்தை மர்­ஜி­னாவை மீட்ட போலி­சார், அத­னைப் பெற்­றோ­ரி­டம் ஒப்­படைத்­த­னர்.

பத்து நாட்­கள் கழித்து குழந்­தை­யைக் கண்ட மகிழ்ச்சியில் கண்­ணீ­ரோடு ஓடி­வந்து அத­னைத் தூக்­கிக் கொஞ்சிய தாய் போலி­சா­ருக்கு நன்றி கூறினார்.

சென்னை ராய­பு­ரத்­தில் கொத்­த­னார் வேலை செய்து வருகிறார் பப்லு. இவரது இரண் டரை வயது குழந்தை மர்­ஜினா.

காணாமல் போன குழந்­தையை 60க்கும் மேற்­பட்ட சிசி­டிவி கேம­ராக்­களை ஆய்வு செய்து போலி­சார் மீட்டனர்.

குழந்­தை­யைக் காட்டி வேலை கேட்­ப­தற்­காக அதைக் கடத்­திச் சென்ற அசா­ம் இளைஞரைப் போலி­சார் தேடி வரு­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon