உயர்கல்வி அமைச்சர்: ‘அரியர்’ தேர்ச்சி குறித்து மாணவர்களுக்கு கலக்கம் வேண்டாம்

கொரோனா கிரு­மிப் பர­வ­லால் மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மோச­மான கால­கட்­டத்­தி­லும், மாண­வர்­க­ளி­டம் முழு கல்­விக்­கட்­ட­ணத்தை வசூ­லித்­துள்ள 14 பள்­ளி­க­ளுக்கு விளக்­கம் கேட்டு நோட்­டீஸ் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் செங்­கோட்­டை­யன் கூறி­னார்.

தந்தை பெரி­யா­ரின் 142வது பிறந்­த­நாளான நேற்று, ஈரோட்­டில் அமைந்­துள்ள பெரி­யா­ர் சிலைக்கு மாலை அணி­வித்து, மரி­யாதை செலுத்­திய அமைச்­சர் செங்­கோட்­டை­யன், ஒரு கோடி ரூபாய் மதிப்­பி­லான நலத்­திட்ட உத­வி­க­ளை­யும் வழங்­கி­னார்.

இதைத்­தொ­டர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­வர், “பெற்­றோர்- மாண­வர்­க­ளின் மன­நிலை, கொரோ னாவின் தீவிரத்தைப் பொறுத்தே பள்­ளி­களைத் திறப்­பது குறித்து முடி­வெ­டுக்­கப்­படும்.

“இணை­யம் மூல­மாக சில மணி நேரங்­கள் மட்­டுமே பாடம் சொல்­லிக்­கொ­டுக்­கப்­படும் நிலை­யில், பல பள்­ளி­கள் முழு கட்­ட­ணத்தை செலுத்­தும்­படி பெற்­றோர்­களை நிர்­பந்­தம் செய்து வரு­கின்­றன.

“மக்­க­ளின் நல­னுக்­காக பல சலு­கை­க­ளை­ அறி­வித்து வரும் தமி­ழக அரசு, தனி­யார் பள்­ளி­கள் கல்­விக் கட்­ட­ணத்தை முழு­மை­யாக வசூ­லிக்­கத் தடை விதித்­துள்­ளது.

“இந்த தடை­யை­யும் மீறி அதிக கட்­ட­ணத்தை வசூ­லித்­துள்ள 14 தனி­யார் பள்­ளி­க­ளுக்கு நோட்­டீஸ் அனுப்­பப்­பட்­டுள்­ளது,” என்று செங்­கோட்­டை­யன் கூறி­னார்.

இதற்­கி­டையே, ‘அரி­யர்’ தேர்­வு­களை ரத்து செய்­த­தன் தொடர்­பில், “தமி­ழக அர­சின் முடிவு தவ­றா­னது,” என்று அண்ணா பல்­கலைக்­க­ழக முன்­னாள் துணை­வேந்­தர் பால­கு­ரு­சாமி, சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்­நி­லை­யில், புத­ன்கிழமை நடை­பெற்ற சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரில், திமுக எம்­எல்ஏ பொன்­முடி, “அரி­ய­ருக்கு பணம் கட்­டிய மாண­வர்­கள் தேர்ச்­சியா? இல்­லையா என்­பதை தமி­ழக அரசு விளக்க வேண்­டும்,” என்­றார்.

அதற்கு பதிலளித்த உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் அன்­ப­ழ­கன், “மாண­வர்­க­ளின் உயிர் முக்­கி­யம் என்­ப­தைக் கருத்­தில் கொண்டு அறி­வித்த அறி­விப்­பு­தான் ‘அரி­யர்’ தேர்ச்சி. உச்­ச­ நீ­தி­மன்­றத்­தின் தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில் உயர்­கல்­வித்­துறை செயல்­பட்டு வரு­கிறது. மாண­ வர் சமு­தா­யத்தை ஏமாற்றும் எண்­ணம் அர­சுக்கு இல்லை. எனவே மாண­வர்­கள் அச்­சம் கொள்­ளத் தேவை­யில்லை,” என்று விளக்­கம் அளித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!