சுடச் சுடச் செய்திகள்

கிருமித்தொற்று பாதிப்பால் ஆயுர்வேத மருத்துவர் மரணம்

கோவை ஆர்ய வைத்­தி­ய­சா­லை­யின் நிர்­வாக இயக்­கு­நரும் அவி­னா­சி­லிங்­கம் பல்­கலைக்­க­ழ­கத்­தின் வேந்­தருமான பி.ஆர். கிருஷ்­ண­கு­மார், 68, கொரோனா கிரு­மித்­தொற்­றின் பாதிப்பு கார­ண­மாக உயி­ரி­ழந்­தார்.

அவ­ரது மறை­வுக்கு பிர­த­மர் மோடி, அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள் உட்பட பல­ரும் இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆயுர்­வேத சிகிச்­சை­யில் சிறந்து விளங்­கி­ய­தற்­காக, கடந்த 2009ஆம் ஆண்டு மத்­திய அர­சின் பத்­ம­ஸ்ரீ விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்டார். அத்துடன், இவருக்கு டாக்­டர் பட்­ட­மும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், இத­யக் கோளாறு கார­ண­மாக 10 நாட் களுக்கு முன்பு தனி­யார் மருத்­துவமனை­யில் அனு­ம­திக்­கப்பட்ட வர், நுரை­யீ­ர­ல் பிரச்­சினை கார ணமாக அவி­னா­சி­யில் உள்ள மற்றொரு மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்பட்­டார். அங்கு அவ­ருக்கு கொரோனா தொற்று இருந்தது உறு­தி­யா­னது. இதை­ய­டுத்து, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயி­ரி­ழந்­தார்.

கிரு­மிப் பர­வலைக் கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்­பாக பிர­த­மர் மோடி நடத்­திய உரை­யா­டல்­களில் பங்­கேற்று கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சித்தா, ஆயுர்­வேத சிகிச்­சை­களை அளிக்கவேண்­டும் என­வும் இவர் வலி­யு­றுத்தி இருந்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon