சுடச் சுடச் செய்திகள்

பிரதமர் பிறந்தநாளில் 370 கிலோ மீன்கள் விநியோகம்

பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விழா நேற்று நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பாஜக பிரமுகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரான நடிகை நமீதா பிரதமரின் பிறந்தநாளில் 370 கிலோ எடை கொண்ட மீன்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

பாஜகவின் மீனவர் அணி சார்பாக சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதி பொது மக்களுக்கு இந்த மீன்கள் விநியோகம் செய்யப்பட்டன.

இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித் துள்ளனர்.

“பிரதமருக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் இன்னும் பல ஆண்டுகள் நம் தேசத்திற்கு சேவை செய்ய நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் இறைவன் அளிக்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்,” என்று முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon