இளைஞர் மரணம்; நான்கு காவலர்கள் மீது வழக்கு

மதுரை அருகே விசா­ர­ணைக்காக அழைத்­துச் செல்­லப்­பட்ட இளை­ஞர் ஒருவர், வீடு திரும்­பா­மல் உயிரை விட்­டுள்­ளார். இந்தச் சம்­ப­வம் தொடர்­பாக இளை­ஞ­ரின் உற­வி­னர்­கள் போராட்­டத்­தில் குதித்­த­னர்.

இதை­ய­டுத்து, குற்­றம்­சாட்­டப் பட்ட நான்கு காவ­லர்­கள் மீது வழக்­குப் ­ப­தியப்­பட்­டுள்­ளது.

மதுரை மாவட்­டம், பேரை­யூர் அருகே உள்ள வாழைத்­தோப்பு கிரா­மத்­தைச் சேர்ந்தவர் இத­யக்­கனி. இவர், அதே ஊரில் தான் காத­லித்து வந்த ஒரு பெண்ணைத் திரு­ம­ணம் செய்­து­கொண்டு தலை­ம­றை­வா­கி­விட்­டார்.

இந்நிலையில், பெண்­ணின் பெற்­றோர் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­த­னர்.

இதையடுத்து, இத­யக்­க­னி­யின் சகோ­த­ரர் ரமேஷை காவல்­து­றை­யி­னர் விசா­ர­ணைக்கு அழைத்­துச் சென்­ற­னர்.

ஆனால், ரமேஷ் மறு­நாள் காலை வரை வீடு ­தி­ரும்­பா­த­தால், காவல்நிலை­யம் சென்று கேட்­ட­போது, அவரை வீட்­டிற்கு அனுப்பி­விட்­ட­தாக காவலர்கள் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், ரமேஷ் அவ­ரது வீட்­டுக்கு அருகே உள்ள மலைப்­பகு­தி­யில் இறந்­து­கி­டந்­தார்.

இத­னால் அதிர்ச்சி அடைந்த குடும்­பத்தினர், ரமே­ஷின் இறப்­பில் மர்­மம் இருப்­ப­தா­கவும் அவரது உயி­ரி­ழப்­புக்கு போலிசாரே கார­ணம் எனவும் குற்­றம்­சாட்­டினர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!