கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி

1 mins read
df990b6f-9255-4ab1-8e17-01fa43e96158
படம்: ஊடகம் -

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 5ஆம் தேதி மூடப்பட்ட கோயம்பேடு சந்தை இப்போது மீண்டும் திறக்கப் பட்டுள்ளது. இங்குள்ள உணவு தானிய சந்தையில் உள்ள 290 கடைகளும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக இந்த சந்தையின் இதர கடைகள் இம்மாதம் 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

135 நாட்களுக்கு பிறகு சந்தை திறக்கப்பட்டுள்ள நிலையில், சந்தைக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் வியாபாரிகளின் உடல் வெப்ப நிலையைச் சோதிக்கவும் முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.