உழைப்பாளி மருத்துவமனை துவக்கம்; ரூ.10க்கு சிகிச்சை

சென்னை: சென்னை, சாலி­கி­ரா­மம், அரு­ணாச்­ச­லம் சாலை­யில் ‘உழைப் பாளி’ என்ற பெய­ரில் புதிய மருத் துவ­ம­னையை சித்த மருத்­து­வர் வீர­பாபு தொடங்கி உள்­ளார்.

இங்கு சித்தா, அலோ­ப­தி­யு­டன் கூடிய ஒருங்­கி­ணைந்த சிகிச்சை அளிக்­கப்­படும் என்­றும் ரூ.10 மட்­டுமே கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும் என்­றும் வீர­பாபு அறி­வித்­துள்­ளார்.

சில தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் கட்­ட­ணங்­களை அதி­க­மாக வசூலித்து வரும் நிலை­யில், வெறும் பத்து ரூபாய்க்கு தர­மான சிகிச்சை கள் வழங்­கப்­படும் என வீர­பாபு அறி­வித்­துள்­ள­தால், அவ­ரது இந்த முயற்சி குறித்து சமூக வலைத் தளங்­களில் பாராட்­டு­கள் குவிந்து வரு­கின்­றன.

இவர், ஏற்­கெ­னவே சென்னை மணப்­பாக்­கம், சாலி­கி­ரா­மம் உள்­ளிட்ட பகு­தி­களில் உண­வ­கங் களை­யும் திறந்து பத்து ரூபாய்க்கு தர­மான மூலிகை உண­வு­களை வழங்கி வரு­கி­றார்.

மருத்­து­வர் வீர­பாபு தீவிர ரஜினி ரசி­கர் என்­ப­தால் தம்­மு­டைய உண வகங்­கள், மருத்­து­வ­ம­னை­யின் பெய­ரில் ரஜி­னி­யின் திரைப்­ப­டத்தை குறிக்­கும் வகை­யில் உழைப்­பாளி என்­றும் ரஜி­னி­யின் புகைப்­ப­டத் தையும் வைத்­துள்­ளார்.

சென்னை மருத்­துவக் கல்­லூ­ரி­யின் முட­நீக்­கி­யல் துறை முன்­னாள் இயக்­கு­நர் அன்­ப­ழ­கன், பொது மருத்­துவ டாக்­டர்­கள் விஜய், மணி­கண்­டன் ஆகி­யோர் அலோ­பதி சிகிச்சை அளிக்­கின்­ற­னர். சித்தா, அலோ­பதி என இரண்டு சிகிச்சைகளை­யும் ஒரே இடத்­தில் ஏழை, எளிய மக்­கள் பெற­லாம் என்று அவர்கள் கூறியுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!