இணைய விளையாட்டு மோகம்; தாயின் வங்கிக் கணக்கில் ரூ.90,000 மாயம்

சாயல்­குடி: விறு­வி­றுப்­பாக சென்று கொண்­டி­ருந்த சிறு­வன் ஒரு­வ­னின் இணைய விளை­யாட்டு மோகம், அவ­னது தாயின் வங்­கிக் கணக்கை துடைத்துவிட்டது.

தனது கணக்­கில் இருந்து மாய­மான ரூ.90,000 பணத்தை மீட்­க­மு­டி­யாது என விசா­ரித்து தெரிந்து­கொண்ட பெற்­றோர், மகனுக்கு விநோ­த­மான தண்­டனையையும் அளித்­துள்­ள­னர். ஒரு நோட்­டில் 1 முதல் 90,000 வரை எண்­க­ளி­லும் எழுத்­தி­லும் எழு­தும்­படி நூத­னத் தண்­டனையையும் பெற்­றோர் வழங்­கி­னர். இருப்­பி­னும், 3,000 வரை மட்­டுமே எழு­திய சிறு­வன் கை வலிப்­ப­தா­கக் கூறி­ய­தைத் தொடர்ந்து, “இனி­மேல் இவ்­வாறு செய்­யக்­கூடாது,” என பெற்­றோர் அறி­வுரை கூறி மன்­னித்­த­னர்.

ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், சாயல்­குடி அருகே உள்ள மேலக்­கி­டா­ரம் கிரா­மத்தைச் சேர்ந்தவர் செந்­தில்­கு­மார். இவ­ரது மகன் குமார், 12, (உண்­மைப் பெய­ரல்ல) 8ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.

கொரோனா ஊர­டங்­கு உத்தரவு காரணமாக விடு­மு­றை­யில் இருந்த குமார் எந்­நே­ர­மும் கைபேசியில் மூழ்கிக் கிடந்­துள்­ளார். தனது தாயின் கைபே­சி­யில் ‘ஃப்ரீ ஃபையர் கேம்’ எனும் விளை­யாட்டை இணை­யம் வழி விளை­யாடியவர், ‘கேம் அப்­டேட்’ கேட்­கும் நேரத்­தில் எல்­லாம் வங்­கி­யில் இருந்து வந்த ஓடிபி எண்­களைப் பயன்­ப­டுத்தி விளை­யாடி உள்­ளார். இவ்­வாறு குமார் தொடர்ந்து செய்ததை அடுத்து, அவ­ரது தாயின் வங்­கிக் கணக்­கில் இருந்த ரூ.90,000 பணம் காலியானது.

இதற்­கி­டையே, தங்­க­ளது மகன் இணைய வகுப்­பில் தான் கவ­னம் செலுத்­து­கி­றார் என நினைத்­தி­ருந்த பெற்­றோர், வங்­கிக்கு பணம் எடுக்­கச் சென்­ற­போது, இந்த உண்மையை அறிந்து அதிர்ந்தனர். வங்கி மேலா­ள­ரி­டம் விசா­ரித்­த­போது இணைய விளை­யாட்­டிற்கு கட்­ட­ண­மாகச் சென்­றது தெரி­ய­வந்­தது. மகனும் தனது தவற்றை ஒப்­புக்­கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!