அன்வர் ராஜா: கண் போன்றது தமிழ்; கண்ணாடி போன்றது ஆங்கிலம்

பர­மக்­குடி: இரு­மொ­ழிக் கொள்கை தான் அதி­மு­க­வின் கொள்கை என்­ப­தால் மும்­மொ­ழிக் கொள் கையை ஆளுங்­கட்சி எதிர்ப்­ப­தில் வியப்­பில்லை என்று கூறி­யுள்­ ளார் அதி­முக முன்­னாள் எம்.பி. அ.அன்­வர் ­ராஜா.

“தமிழ்­நாட்­டிற்கு தமிழ்­மொழி கண் போன்­றது, ஆங்­கில மொழி கண்­ணாடி போன்­றது. கண்­ணும் வேண்­டும், கண்­ணா­டி­யும் வேண் டும்,” எனவும்­ அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

கொரோனா கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்கும் பணி­கள் குறித்து ஆய்வு செய்­வ­தற்­காக நாளை மறு­நாள் 22ஆம் தேதி ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­திற்கு வருகை தரு­கி­றார் முதல்­வர் பழ­னி­சாமி. அவரை வர வேற்­பது குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் பர­மக்­கு­டி­யில் நடந்­தது.

இக்­கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட அன்­வர் ராஜா செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், “தனது விடு­த­லைக்­குப் பின் சசி­கலா எடுக்­கும் அர­சி­யல் முடி­வால், தமி­ழக அர­சி­ய­லில் மிகப்­பெ­ரிய மாற்று அர­சி­யல் தாக்­கம் இருக்­கும்,” என்­றார்.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்தின் கீழ் பெறப்­பட்ட தக­வ­லின் படி, அடுத்­தாண்டு ஜன­வரி 27ஆம் தேதி சசி­கலா விடு­த­லை­யாக வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

சட்­ட­மன்­றத் தேர்­தல் நெருங்கி வரும் சூழ­லில் சசி­கலா விடுத லையாக இருப்­பது அதி­முக தலை­மைக்கு ஏற்­கெ­னவே தலைவலி­யாகி உள்ள நிலை­யில் அன்­வர் ராஜா போன்ற ஒருசில நிர்­வா­கி­கள் மீண்­டும் சசிகலா புகழ் பாடத் தொடங்கி­யி­ருப்­பது கட்­சித் தலை­மையை அதிர்ச்சி அடைய வைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!