தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2,000 பலூன்கள் வெடித்து பலர் காயம்; பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு

1 mins read
d9a83f3c-0d41-4573-88a2-e05fa64ebb1a
படம்: ஊடகம் -

அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவுக்காக கொண்டுவரப்பட்ட 'ஹீலியம் நைட்ரஜன்' வாயு நிரப்பப்பட்ட 2,000 பலூன்கள் வெடித்ததில் 20 பேருக்கும் மேலானோர் காயம் அடைந்தனர்.

பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விழாவை அடுத்து, தமிழகத்தில் ஆங்காங்கே சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முறையாக அனுமதி பெறா மல் பாஜகவினர் சென்னை அம்பத் தூர், பாடி திருவலிதாயம் சிவன் கோவில் அருகே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, 2,000 ஹீலியம் நைட்ரஜன் வாயு பலூன்களை பறக்கவிட இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சரவெடி பட்டாசும் கொளுத்தப்பட்டது.

இந்த தீப்பொறி, பலூன்கள் மீது பட்டு வெடித்துச் சிதறியதில் பலர் காயம் அைடந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட் டாளர் பிரபாகரன், சிறப்பு விருந்தினர் முத்துராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவில் யாரும் எதிர்பாராதவிதமாக 'ஹீலியம் நைட்ரஜன்' வாயு நிரம்பிய 2,000 பலூன்கள் வெடித்ததில் கட்சித் தலைவர்கள் உட்பட பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. சிறியவர்கள், பெரியவர்கள் என 20 பேர் வரை மருத்துவமனைகளில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டனர். காவல்துறை அனுமதியைப் பெறாமல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்