50,000 பேர் வேலைவாய்ப்பு பெற இணையக் கல்வி, பயிற்சி இலவசம்

சென்னை: தமி­ழ­கத்­தில் வேலை வாய்ப்பு கிடைக்­கா­மல் சிர­மப்­பட்டு வரும் 50,000 பேருக்கு இணை­யம் வழி இல­வ­சக் கல்­வி­யும் அதற்­கான பயிற்­சி­களும் அளிக்­கப்­பட உள்­ளன.

தமி­ழக முதல்­வர் பழ­னி­சாமி முன்­னி­லை­யில், தமிழ்­நாடு திறன் மேம்­பாட்­டுக் கழ­கத்­திற்­கும் அமெ­ரிக்­கா­வின் ‘கோா்ஸெரா’ நிறு­வ­னத்­திற்­கும் இடையே இந்த ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது.

இதன்­மூ­லம், வேலை­யற்ற இளை­யர்­கள் அதிக அள­வில் பயன்­பெற வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் உள்ள இளை­ஞர்­கள், படித்­த­வர்­கள், படிக்­கா­த­வர்­கள் என பல­ரும் வேலை வாய்ப்­பின்றி பெரும் சிர­மப்­பட்டு வரு­கின்­ற­னர். வேலை­வாய்ப்பு அலு­வ­ல­கத்­தில் தங்­க­ளது பெயரைப் பதிந்­து­விட்டு வேலை­வாய்ப்­புக்­காகக் காத்­தி­ருப்போரும் ஏரா­ளம்.

அத்­து­டன், கொரோனா ஊர­டங்­கி­னா­லும் அதி­க­மா­னோர் வேலை­வாய்ப்பை இழந்து தவித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் வேலை­யற்ற 50,000 பேருக்கு இணையம் வழி­யில் வேலை­வாய்ப்பு பயிற்­சி­களை வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அமெ­ரிக்­கா­வின் ‘கோா்ஸெரா’ நிறு­வ­னம், உல­கத் தரம் வாய்ந்த முன்­னணி இணை­ய­வழி கற்­றல் தள­மா­கும். இந்த நிறு­வ­னம் உல­கெங்­கி­லும் உள்ள 80 நாடு­களில் உள்ள மக்­க­ளின் திறன்­களை வளா்க்­கும் நோக்­கில், பயிற்சி வகுப்­பு­களை நடத்தி வரு­கிறது.

பல்­க­லைக்­க­ழ­கங்­கள், கல்­லுா­ரி­கள், கூகுள், ஐபி­எம் போன்ற நிறு­வ­னங்­கள், அரசு நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து பல்­வேறு பாடங்­களி­ல் சான்­றி­தழ்­க­ளை­யும் பட்­டப் படிப்­பு­க­ளை­யும் இந்­நி­று­வ­னம் வழங்கி வரு­கிறது.

இந்த இணை­யப் பயிற்­சி­யின் மூலம் 50,000 பணி­யி­டங்­கள் நிரப்­பப்­ப­டு­மா­னால் வேலை­யற்­றோ­ரின் விகி­தம் குறைந்து பொரு­ளா­தா­ரம் மேம்­படும் என்று ஊடகத் தகவல்கள் தெரி­வித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!