சென்னை: தமிழக மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே நியாய விலை பொருட்களைப் பெறும் வகையில், புதிய சிறப்புத் திட்டம் ஒன்றைத் தமிழக அரசு நேற்று தொடங்கி வைத்தது.
அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள 536,437 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள 3,501 நகரும் நியாய விலைக் கடை களை முதல்வர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின்படி, மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே வாக னங்களில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பெல்லாம், நியாய விலைக் கடைகளில் விற்கப்படும் பொருட் களை வாங்க மக்கள் நீண்ட வரிசை பிடித்து கால்கடுக்க நிற்பதும், இதனால் பொருட்களை வாங்க வரும் முதியோர் பெரும் அவதிப்படுவதும், வீட்டிற்குத் திரும்ப மணிக்கணக்கில் காலதாமதம் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.
இப்போது, இந்தப் பிரச்சிைன களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வீடுகளுக்கே சென்று நியாய விலைப் பொருட்கள் வழங் கப்பட உள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் 400, நாகை 262, கிருஷ்ணகிரி 168, திருவண்ணாமலை 212 கடைகள் உட்பட 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்தக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் ஏற்கெனவே கூட்டுறவுத் துறையின் சார்பில் 33,000 நியாய விலைக் கடைகள் இயங்கும் நிலையில், இப்போது இந்த நகரும் கடைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
அத்துடன், குழந்தைகள், பெண்கள், முதியோர்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டமும் நேற்று தொடங்கப்பட்டது.

