மழை பெய்ய வேண்டி சாட்டையடி வழிபாடு

1 mins read
251c2e61-5bc8-444c-af23-35b88b212a85
மழை பெய்ய வேண்டி மண்டியிட்டு அமர்ந்து சாட்டையடி வாங்கும் பக்தர்கள். படம்: ஊடகம் -

ஓசூர் அருகே நாக­மங்­க­லம் கிரா­மம் உள்ளது. இந்த கிராமத்­தில் உள்ள நாக­மங்­க­லம் ஏரி கடந்த 15 ஆண்­டு­க­ளாக போதிய மழையின்றி வறண்டு கிடக்­கிறது.

இந்­நி­லை­யில், தங்­கள் கிரா­மத்­தில் மழை பொழிந்து நாக­மங்­க­லம் ஏரி நிரம்பவேண்­டும் என்று ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­கள் வழி­பாடு நடத்தினர்.

இந்த வழி­பாட்­டின் ஒரு பகு­தி­யாக, கிராம தேவ­தை­களை மேள தாளத்துடன், ஆடிப்பாடி ஏரிக்­குக்­கொண்டுவந்து, யாகம் வளர்த்து, பூஜை­கள் செய்து 40க்கும் மேலானோர் சாட்­டை­யடி வாங்கி விநோத வழி­பாடு செய்­த­னர்.

இந்த ஏரி­யைச் சார்ந்­துள்ள அயர்­னப்­பள்ளி, ஊடே­துர்க்­கம் உள்ளிட்ட கிராம மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஏரி வறண்­டுள்­ள­தால் விவ­சா­யம், கால்­நடை வளர்ப்பு பாதிக்­கப்­பட்டு குடி­நீர் தட்­டுப்­பா­டும் நிலவி வரு­கிறது.