கொரோனா ஊரடங்கால் வறுமையின் பிடியில் சிலை மனிதன்

கொரோனா ஊர­டங்கு உத்­த­ர­வால் தனது வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யாகி விட்­ட­தா­கக் கூறி­யுள்ள சிலை மனி­தன் அப்­துல் அஜிஸ், தற்­போது ஊதி­யம் எது­வும் வழங்­கப்­ப­டா­த­தால், வேறு ஏதே­னும் புதிய வேலைக்குச் செல்ல உள்ள தாகக் கூறி­யுள்­ளார்.

சென்­னை­யில் புகழ்­பெற்ற சுற்று லாத்­த­லங்­களில் ஒன்­றாக விளங்­கும் விஜிபி கோல்­டன் பீச்­சில் கடந்த 37 வரு­டங்­க­ளாக இவர் பணி­பு­ரிந்து வரு­கி­றார்.

ஊர­டங்கு கார­ண­மாக அனைத்து பொழு­து­போக்குத் தலங் களும் மூடப்­பட்­டுள்­ளன. வரும் அக்­டோ­பர் முதல் கடற்கரை மீண்­டும் திறக்­கப்­படும் எனக் கூறப்­படு­கிறது. எனி­னும், இது­வும் உறுதி யான அறி­விப்பு அல்ல.

இந்நிலையில், வறுமை கார­ண­மாக தன்­னி­டம் உள்ள பொருட்­களை விற்று பிழைத்து வருவதாகக் கூறும் அஜிஸ், “நான் 1985 முதல் 37 ஆண்டுக­ளா­கப் பணி­பு­ரிந்து வரு­கி­றேன். பல­முறை இப்­ப­ணி­யால் எனது உடல்­ந­லம் பாதிக்கப் பட்­டு, வேலை­யில் இருந்து வில­கு­வ­தாக நிர்­வா­கத்­தி­டம் கூறினேன்.

“ஆனால், நிர்­வா­கம் என்­னைச் சமா­தா­னம் செய்து ஊதி­யத்­தில் ரூ.2,000 அதி­க­ரித்து பணி­யில் தொடர வைத்­தது.

“இப்­போ­தைய நிலை­யில் ஊதி யம் இன்றி மேலும் காலத்தை ஓட்­ட­மு­டி­யாது என்பதால் வேறு பணிக்கு செல்ல முடிவு செய்­துள்­ளேன்.

“சிலை மனி­த­னா­கப் பணி­பு­ரி­வது எளி­தா­னது அல்ல. உண­வுப் பழக்­கம், தின­மும் யோகா­ச­னம், மேலும் சில உடற்­ப­யிற்­சி­கள் செய்­வ­தால்தான் நான் இதைச் சரி­வர செய்து வரு­கி­றேன். இங்கு வருகை தந்த பிரபலங்களான மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், விஜய காந்த், விக்ரம், அர்ஜுன் ஆகியோர் என்னைப் பாராட்டி புகழ்ந்துள்ளனர். இருப்பினும், பலரும் எனது கவ­னத்­தைத் திசை திருப்ப முயன்­றா­லும் நான் அதைக் கவனிக்காதது போல் சிலையாக நிற்பேன்,” எனக் கூறுகிறார்.

விஜிபி கோல்­டன் பீச் கடற்­க­ரைப் பகு­தி­யின் நுழை­வா­யி­லில் சிறிதும் ஆடாமல் அசையாமல் நிற்கும் ‘சிலை மனிதன்’ அப்துல் அஜிஸ்.

இந்த வாயிற்­கா­வ­லருக்கு பல லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!