விஜய் ரசிகர்களின் புதிய சுவரொட்டிகளால் அதிமுகவில் பரபரப்பு

நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் அப் போதைக்கு அப்போது புதுமையான முறையில் சுவரொட்டிகளை ஒட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரத்தில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் புதிய சர்ச்சையைக் கிளப்பி யிருக்கிறது.

அதில், எம்.ஜி.ஆர். படத்துடன் விஜய்யும் கை அசைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுளளன.

அத்துடன் ‘மக்கள் நலன் காக்க... மாணவர்களின் குறை தீர்க்க.. தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கே கிடைத்திட.. நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வரே... உங்கள் ஆட்சிக்காக காத்திருக்கிறோம்’ என்று அச்சிடப் பட்டுள்ளது.

விஜய்யை அவரது ரசிகர்கள் அடுத்தடுத்து எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிட்டு சுவரொட்டிகளை ஒட்டி வருவது அதிமுக தொண்டர்களின் கோபத்தை கிளறியிருக்கிறது.

அண்மையில் விஜய் திருமண நாளை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் விஜய், எம்.ஜி.ஆர். போலவும் அவரது மனைவி சங்கீதா, ஜெயலலிதா போலவும் சித்திரிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஜூன் மாதம் திண்டுக் கல்லில் ஒட்டப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் சுவரொட்டி அதை யும் தாண்டி பெரும் பரபரப்பை ஏற் படுத்தியிருந்தது. அதில் நடிகர் விஜய் படத்துடன் அண்ணா, பெரி யார் படங்கள் இடம்பெற்று இருந் தன. அதன் மேலே “நீங்கள் அர சியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார்,” எனும் வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

தற்போதைய சூழலில் 2021ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வரு கிறது. இந்த நிலையில் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் விதமாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகைப் படங்களில் விஜய் முகத்தை ஒட்ட வைத்து சுவரொட்டிகளை விஜய் ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!